நாச்சியார் வசனம் சர்ச்சை : ஜோதிகாவின் பதில்


பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் நாச்சியார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். வரும் டிசம்பரில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். டீசரை பார்த்த பலரும் பாராட்டினர். ஒரு சிலர் டீசரின் இறுதியில் ஜோதிகா பேசியிருக்கும் வசனத்திற்கு எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது ஜோதிகா இதுகுறித்து பதிலளித்துள்ளார். டீசரை பற்றி இப்போது பேச விரும்பவில்லை படம் வெளியாகும் பொது அணைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார்.