விவேகம் சாதனையை முறியடித்த தானா சேர்ந்த கூட்டம்


சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் வெளியானது.  கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த டீஸர் அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் சாதனையை முறியடித்துள்ளது. விவேகம் படத்தை விட அதிக லைக்குகளை பெற்றுள்ளது.

விவேகம் படத்தின் டீஸர் 6 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர் 6 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்று விவேகத்தை சாதனையை முறியடித்துள்ளது.