மீண்டும் திரையிடப்படுகிறது 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம்


சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், துளசி, ஷாதிகா நடிப்பில் உருவான 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி வெளியானது.

விமர்சகர்கள், மக்களின் கருத்துகளை கருத்தில் கொண்டு 'நெஞ்சில் துணிவிருந்தால்' படக்குழு, நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக நீக்கியது.

நவம்பர் 17-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரையிடல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் டிசம்பர் 17 ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.