நயன்தாராவுக்கு பதில் சமந்தா நடிக்கும் புதிய படம்


நடிகை சமந்தா தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். கன்னடத்தில் வெளியாகி விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் யு-டர்ன். அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சமந்தா.

இயக்குனர் பவன்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். தமிழிலும் அவரே இயக்கவிருக்கிறார். முதலில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது சமந்தா நடிப்பது உறுதியாகியுள்ளது.

பவன் குமார் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவிருக்கிறது.