அருவி படத்திற்கு பாராட்டு தெரிவித்த ஷங்கர்


அருண் பிரபு இயக்கத்தில் புதுமுக நடிகை அதிதி பாலன் நடித்திருக்கும் படம் அருவி. வெளியாவதற்கு முன்பே படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டியிருந்தனர். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் டிசம்பர் 15 அன்று வெளியானது.

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 'அருவி ஒரு நல்ல படம். அனைத்தையும் தோலுரித்துள்ளது. இயக்குனர் அருண் பிரபு நன்றாக பணியாற்றியுள்ளார், அதிதி பாலனும் மற்றவர்களும் நன்றாக நடித்துள்ளனர் ' என்று பாராட்டியுள்ளார்.