மாயவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சந்தீப் கிஷன் லாவண்யா திரிபாதி நடிப்பில் சி.வி.குமார் இயக்கும் படம் மாயவன். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் செப்டெம்பரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சில பிரச்சனைகளால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது இந்த படம் டிசம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.வி.குமார் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் இந்த படத்தில் டேனியல் பாலாஜி ஜாக்கி ஷெராப் மற்றும் பலரும் நடித்துள்ளனர். சந்தீப் கிஷன் நடிப்பில் வெளிவந்த மாநகரம் படம் வெற்றி பெற்றதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.