வேறொரு சுயேச்சை வேட்பாளரை வெற்றி பெறச்செய்வேன் : விஷால்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக டிசம்பர் 4ஆம் தேதி  வேட்புமனு தாக்கல் செய்தார். 

இந்நிலையில் நடிகர் விஷாலின் முதலில்  வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதியில் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.  விஷாலை முன்மொழிந்தவர்களில் இருவர் அவர்கள்  கையெழுத்திடவில்லை என்று கூறியதால் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து பேசிய விஷால், 'என் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் என்ன மற்றோரு சுயேச்சை வேட்பாளரை வெற்றி பெறச்செய்வேன்' என்று கூறினார்.