அருவி படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்


அருண் பிரபு இயக்கத்தில் புதுமுக நடிகை அதிதி பாலன் நடித்திருக்கும் படம் அருவி. வெளியாவதற்கு முன்பே படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டியிருந்தனர். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் நேற்று (டிசம்பர் 15) வெளியானது.

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 'அருவி படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருகிறது. படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்' என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.