விஜய்யின் அப்பா மீது வழக்கு பதிவு செய்யலாம் உயர் நீதிமன்ற உத்தரவால் ரசிகர்கள் அதிர்ச்சி


நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். அவர் பல வெற்றிப்படங்களை இயக்கியவர். ரஜினி விஜயகாந்த் போன்ற பெரிய நடிகர்களை இயக்கியிருக்கிறார். அவர் ஒரு மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது போன்றது என்று சந்திரசேகர் பேசியதாக இந்து முன்னணி நிர்வாகி புகார் கொடுத்துள்ளது. அதை விசாரித்த நீதிமன்றம், முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.