விஷாலின் அரசியல் வருகைக்கு கெஜ்ரிவால் வரவேற்பு


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்ட மன்ற உறுப்பினராக இருந்த தொகுதி ஆர்.கே.நகர். இறந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக டிடிவி தினகரன் ஆகியோர் நிற்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஷால் ஆர்.கே.நகரில் போட்டியிடப்போவதாக அறிவித்து இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

தற்போது டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மீ கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் விஷால் அரசியலுக்கு வருவதை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஷால் அரசியலுக்கு வருவது பல இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.