தொடங்கியது ஜெயம் ரவியின் புதிய படம்


ஜெயம் ரவி சங்கமித்ரா படத்திற்கு முன்பு ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக ராஸீ கண்ணா நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்திற்கு அடங்க மறு என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்திற்கு சாம் இசையமைக்கிறார். சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது . இது குறித்து ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.