நிறைவடைந்தது 'இமைக்கா நொடிகள்' படப்பிடிப்பு.ரிலீஸ் எப்போது ?


அதர்வா நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இமைக்கா நொடிகள்'. படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்த படத்தை 'டிமான்ட்டி காலனி' படத்தைத் தயாரித்த கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கின்றது.  ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனுராக் காஷ்யப் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவைத்துவிட்டதாக அதர்வா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். விரைவில் இறுதிக்கட்ட பணிகளை முடித்து ஜனவரியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.