அதர்வா ஹன்சிகா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது: படங்கள் உள்ளே


சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

செம போத ஆகாத, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இந்த படங்களை முடித்துவிட்டு சாம் ஆண்டன் இயக்கும் படத்தில் அதர்வா நடிக்க இருக்கிறார். 

இவர் டார்லிங், எனக்கு இன்னொரு பெயர் இருக்கு போன்ற படங்களை இயக்கியவர்.

பெயரிடப்படாத இந்த படத்தில் நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்த படத்தை ஆரோ சினிமாஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று (டிசம்பர் 7)ஆம் தேதி நடைபெற்றது.