டிசம்பர் இறுதியில் ரஜினியின் கட்சி அறிவிப்பு ?


ரஜினிகாந்த் கடந்த செப்டெம்பர் மாதம் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் போர் வரும் பொது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார். அதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவது உறுதியானது.

அனால் அவர் எப்போது வருவார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.இந்நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ரஜினி, காலத்தில் இறங்க வேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த வரும் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் பற்றிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.