பொங்கல் ரேஸில் இணைந்த 'ஸ்கெட்ச்': அதிகாரபூர்வ அறிவிப்பு


விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்கெட்ச்'.  இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்திற்கு டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தை பொங்கல் விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. வரும் ஜனவரி 12அம தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு. 

பொங்கல் விடுமுறையை குறிவைத்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமும் வெளிவரவுள்ளது. விஷாலின் இரும்புத்திரை, விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், பிரபுதேவாவின் குலேபகாவலி ஆகிய படங்களும் வரவுள்ளன. இதனால் வரும் பொங்கல் பண்டிகை சினிமா ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையவுள்ளது.