தானா சேர்ந்த கூட்டம் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல டி.வி சேனல்


சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். அனிருத் இசையமைக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. 

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை சன் டி.வி கைப்பற்றியுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் கார்த்திக்,'மெட்ராஸ்' கலையரசன்,நந்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.