பாடப்புத்தகத்தில் விஜய்யின் புகைப்படம் ரசிகர்கள் மகிழ்ச்சி


தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஜய்.  அவருக்கு ரசிகர்கள் ஏராளம். அந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக நடிகர் விஜய்யின் புகைப்படம் சிபிஎஸ்சி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழர்களின் கலாச்சாரம் வேஷ்டி சட்டை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக  நடிகர் விஜய் வேஷ்டி சட்டையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை காண்பித்துள்ளனர்.

விஜய்யின் அந்த படம் வேலாயுதம் படத்தில் வருவது. இந்த செய்தியை விஜயின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.