ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் ஏ.ஆர் முருகதாஸ் : ஹீரோ யார் ?


2004 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ஹாலிவுட் படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார்.

2004 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான படம் மில்லியன் டாலர் பேபி. குறைந்த செலவில் உருவான இந்த படம் மாபெரும் வசூலை அள்ளியது. அது மட்டுமின்றி இந்த படத்திற்க்கு மூன்று ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது.தற்போது இந்த படம் பாலிவுட்டில் அதிகாரபூர்வமாக ரீமேக் செய்யப்படுகிறது. 

முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாகவும்  மரினா குவார் என்ற நடிகை கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.