உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா


உதயநிதி ஸ்டாலின் தற்போது ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில் நடித்து வருகிறார். பார்வதி நாயர், நமீதா பிரமோத் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் உதயநிதி சீனு ராமசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை நடிகர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கிய தர்மதுரை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.