சாய் பல்லவி நடிக்கும் 'கரு' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு


பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் பிரபலமானவர் சாய் பல்லவி. தமிழில் அவர் அறிமுகமாகவிருக்கும் படம் கரு. ஏ.எல்.விஜய் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.