உள்குத்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது


கபாலி படத்திற்கு பிறகு 'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் படம் உள்குத்து. தினேஷ், நதிதா,பாலசரவணன், ஜான் விஜய் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை கார்த்திக் ராஜா இயக்குகிறார். கபாலி படத்தில் சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் அவரின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. 

கபாலி படத்திற்கு முன்பு அவர் நடித்த விசாரணை திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. விசாரணை படத்திற்கு பிறகு அவர் நடித்த சில படங்கள் சரியாக வெற்றி பெறவில்லை . 

இந்நிலையில் அவர் நடித்த திரைப்படம் உள்குத்து. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பின்பு தள்ளி வைக்கப்பட்டது.தற்போது இந்த படம்  திரைப்படம் டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்தை அவர் பெரிதும் எதிர் பார்த்திருக்கிறார்