பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கிறாரா பாகுபலி ராணா ?


பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படம் கும்கி. இந்த படம் நல்ல வசூலை பெற்றுத்தந்தது.

தற்போது இந்த படத்தின் 2 ஆம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் பிரபு சாலமன். படத்தில் புது முகங்கள்  மதிவாணன், அதிதி மேனன் நடிக்கின்றனர். இந்த படத்தை பெண் இந்தியா லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது இந்த படத்தில் 'பாகுபலி' ராணா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை 2018 ஆம் ஆண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.