காட்டேரி படத்தில் ஓவியாவுக்கு பதில் ஹன்சிகா ?


இயக்குனர் டி.கே இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் வைபவ். இதனை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கஉள்ளது .

இந்த படத்திற்கு காட்டேரி என்று பெயர் சூட்டியுள்ளனர்.  இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. முதலில் ஓவியா நாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார்.

தற்போது ஓவியாவுக்கு பதிலாக ஹன்சிகாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.