மெர்சல் படத்தினால் நஷ்டமா ? தயாரிப்பாளர் தகவல்


விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய மெர்சல் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரு படத்தை பாராட்டினார்.  படத்திற்கு வந்த எதிர்ப்புகளும் படத்தின் வசூலை அதிகமாக்கின. 

படத்தின் வசூல் 250கோடி என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது மெர்சல் படத்தினால் 30 முதல் 40 கோடி வரை நஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அதன் தயாரிப்பாளர் இது குறித்த விளக்கியுள்ளார், 'ஒரு படத்தின் வசூலை பற்றி அதன் தயாரிப்பாளர் கூறாத நிலையில் படம் நஷ்டம் என்று எப்படி கூறுகிறார்கள் படம் வெற்றிகரமாக 50வது நாளாக  ஓடிக்கொண்டிருக்கிறது' என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.