என் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு : விஜய் சேதுபதி


தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. வருடத்திற்கு 5 படங்களுக்கு மேலாவது அவரின் படங்கள் ரிலீஸ் ஆகும்.  அவரை பிடிக்காதவர்கள் எண்ணிக்கையும் பெரிய அளவில் இல்லை. அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகர் விஜய் சேதுபதி.

அவரின் பெயரில் ட்விட்டரில் ஒரு கணக்கு செயல்பட்டு வருகிறது. அது அவர் அவரின் உண்மையான கணக்கு இல்லை. இது குறித்து அவர் ஃபேஸ் புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

'இது என் பெயரில் செயல்படும் போலிக்கணக்கு. எனக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை. அனைவரும் கவனமாக இருங்கள்.' என்று குறிப்பிட்டுள்ளார்.