சூர்யா, விஜய் சேதுபதி, விஷாலுடன் மோதும் பிரபுதேவா


பிரபுதேவா மற்றும் ஹன்சிகா நடிப்பில் கல்யாண் இயக்கம் படம் குலேபகாவலி. இந்த படத்தை கே.ஜெ.ஆர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு விவேக் மேர்வின் இசையமைக்கிறார்.

குலேபகாவலி படத்தை பொங்கலன்று வெளியிடவுள்ளதாக அதன் தயாரிப்பாளர் ராஜேஷ் அதிகாரபூர்வமாக  அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பொங்கலன்று சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' படமும் விஷால் நடித்துள்ள 'இரும்புத்திரை' படமும் விஜய் சேதுபதி நடிப்பில் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படமும்  வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.