சூர்யா படத்தில் நடிக்கும் சாய் பல்லவி : அதிகாரபூர்வ அறிவிப்பு


நடிகர் சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். அந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கித்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. 

ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார்.

இது தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மற்ற கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகவுள்ளது.