தமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்


கனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை 

இனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.