ரஜினிக்கு தமிழில் வாழ்த்து கூறிய சேவாக்


நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி திரையுலகினரும், அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரும் ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சேவாக் ஒருபடி மேலே போய்  ரஜினிக்கு தமிழிலேயே வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா... நீங்கள்தான் இப்போதும் எப்போதும் சூப்பர் ஸ்டார்! இன்றுபோல் என்றும் நீங்கள் அன்பில் நனைந்திருங்கள்!' என்று குறிப்பிட்டுள்ளார்.