சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியீடு


சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்து வெளிவந்த படம் நெஞ்சில் துணிவிருந்தால். சில விமர்சனங்களை அடுத்து படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. அந்த வேளையில் சுசீந்திரன் தனது அடுத்த படத்தை தொடங்கினார்.

புதுமுகங்களை வைத்து அவர் தனது அடுத்த படத்தை இயக்கிவந்தார். அந்த படத்திற்கு 'ஏஞ்சலினா' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

அந்த படத்தின் போஸ்டரையும் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைக்கிறார்.