கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி


லிங்கா படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படம் 'முடிஞ்சா இவனை புடி'. தமிழ் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கன்னட நடிகர் சுதீப், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

அந்த படத்தை தொடர்ந்து நீண்ட நாட்கள் படம் இயக்காமல் இருந்த ரவிக்குமார் தற்போது ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் அரவிந்தசாமி நாயகனாக நடிக்கிறார்.

அரவிந்தசாமி தற்போது சதுரங்க வேட்டை2, நரகாசூரன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.