தொடங்கியது 'ஹிப் ஹாப்' ஆதியின் அடுத்த படம்


ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் அவரே நடித்து வெளியிட்ட படம் மீசைய முறுக்கு. அந்த படத்தில் ஆத்மிகா நாயகியாகவும் ஆர்.ஜெ.விக்னேஷ் , ம.க.பா.ஆனந்த், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு அவரே இசையமைத்திருந்தார். குஷ்புவின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் ஆதி நடிக்கும் அடுத்த படம் தொடங்கியுள்ளது.  அவ்னி மூவிஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் நடிக்கிறார் ஆதி. இது குறித்த அறிவிப்பை ஆதி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள்ளர்.

இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தில் பணிபுரியும் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.