அருவி படத்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார்


அருண் பிரபு இயக்கத்தில் புதுமுக நடிகை அதிதி பாலன் நடித்திருக்கும் படம் அருவி. வெளியாவதற்கு முன்பே படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டியிருந்தனர். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் டிசம்பர் 15 அன்று வெளியானது.

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அருவி படத்தின் இயக்குனர் பிரபு ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 'உச்சம் தொடும் அன்பின் கொடி. ஆம். ஒரு தொலைபேசி அழைப்பு. திரு. ரஜினிகாந்த் @superstarrajini அவர்களிடமிருந்து. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! ' என்று கூறியுள்ளார்.