2.0 கிராபிக்ஸ் தாமதம்: அமெரிக்க நிறுவனம் மீது வழக்கு தொடர படக்குழு முடிவு


ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார் எமி ஜாக்ஸ்ன் ஆகியோர்நடிக்கும்  படம் 2.0. எந்திரன் படத்தை போன்று ரோபோவை கதைக்களமாக கொண்ட இந்த படம் எந்திரனின் தொடர்ச்சி இல்லை என்று ஷங்கர் கூறியிருந்தார்.

இந்த படம் ஜனவரி மதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த படம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மதம் வெளிவரும்  என அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு காரணம் சொன்ன தேதிக்குள் கிராபிக்ஸ் பணிகளை முடிக்காதது தான் என்று தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி 90 சதவீதம் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 50 சதவீதம் மட்டுமே கிராபிக்ஸ் பணிகள் முடிவடைந்துள்ளது. 

ஆஸ்கர் வாங்கிய அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் இப்படி செய்திருப்பது படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிராபிக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர படக்குழு முடிவு செய்துள்ளது.