'Star wars' படத்தை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த ரஜினி : Google வெளியிட்ட தகவல்



கடந்த டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி திரையுலகினரும், அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வரிசையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஷ்வின், சேவாக்,  மம்தா பானர்ஜி, சந்தரபாபு நாயுடு  ஆகியோரும் ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கூகுள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வாரம் ரஜினிகாந்த் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஹாலிவுட் படமான Star wars ஐ பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார் ரஜினி.