ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : விஷால் வேட்புமனு நிராகரிப்பு


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் சுயேட்சையாக டி.டி.வி. தினகரன் போன்றோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து நேற்று(டிசம்பர் 4) வேட்புமனு தாக்கல் செய்தார். 

இந்நிலையில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. விஷாலை முன்மொழிந்தவர்களின் கையொப்பம் தவறாக இருந்ததால் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.