சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் நடிக்கும் விஜய்


சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜயின் 'பூவே உனக்காக', 'துள்ளாத மனமும் துள்ளும்' உள்ளிட்ட படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் இதற்கு முன்பு அவர் நடித்த மெர்சல் திரைப்படம் தேனாண்டாள் நிறுவனத்தின் நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.