2.0 டீஸர் பற்றி ஷங்கர் வெளியிட்ட தகவல்


ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்ஸ்ன் ஆகியோர் நடிக்கும் படம் 2.0. எந்திரன் படத்தை போன்று ரோபோவை கதைக்களமாக கொண்ட இந்த படம் எந்திரனின் தொடர்ச்சி இல்லை என்று ஷங்கர் கூறியிருந்தார்.

இந்த படம் ஜனவரி மதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த படம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மதம் வெளிவரும்  என அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ரசிகர்கள் அனைவரும் 2.0 டீஸர் எப்ப்போது வரும் என காத்திருந்த நிலையில் ஷங்கர் அதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ' கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதாகவும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முழு வீச்சில் டீஸர் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் வெளியிடப்படும்' என்றும் தெரிவித்தார்.