மீண்டும் தள்ளிப் போகிறதா 2.0 ரிலீஸ்


ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார் எமி ஜாக்ஸ்ன் ஆகியோர் நடித்த படம் 2.0. எந்திரன் படத்தை போன்று ரோபோவை கதைக்களமாக கொண்ட இந்த படம் எந்திரனின் தொடர்ச்சி இல்லை என்று ஷங்கர் கூறியிருந்தார்.

இந்த படம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரும்  என அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது.

முழுவதும் 3டி கேமராவில் ஷூட்டிங் செய்துள்ளதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் படம் ஏப்ரலில் வெளியாவது சாத்தியமில்லை எனத்தெரிகிறது.  இந்தியாவிலேயே முதன்முறையாக 3டி கேமராவில் எடுக்கப்படும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.