பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்குகிறதா அஜித்தின் விசுவாசம் ?


அஜித் நடிப்பில் 'சிறுத்தை ' சிவா இயக்கிய படம் விவேகம். இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் நல்ல வசூலை பெற்றது.

இந்நிலையில் அஜித் இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்திற்கு விசுவாசம் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்பு விலகினார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.