'இந்தியன் 2' வெளி வருமா? ஷங்கர் வெளியிட்ட தகவல்


ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் இந்தியன். அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதால் ஏற்படும் பாதிப்புகளையும், அதை தட்டிக்கும் கேட்கும் கதாநாயகன் பற்றிய படம் என்பதால் படம் மாபெரும் ஹிட்டானது.

இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பக்கம் எடுக்கவிருப்பதாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இறுதி நாளன்று அதிகார பூர்வமாக அறிவித்தனர். அதன் பிறகு அதை பற்றிய பேச்சுக்கள் இல்லாமல் போனது.

தற்போது இயக்குனர் ஷங்கர் அதற்கான கதையை தயாரித்து வருகிறார். தைவானில் இருக்கும் ஷங்கர் அங்கு 'இந்தியன் 2' என்ற ஏர் பலூன் ஒன்றை பறக்கவிட்டுள்ளார். இதன் மூலர் இந்தியன் 2 விரை தொடங்கவிருப்பதை உறுதி படுத்தியுள்ளார் ஷங்கர்.