3 நாட்களுக்கு 30 கோடி ! விளம்பரத்தில் நடிக்க மறுத்த ரஜினி


எப்பொழுதும் விளம்பரத்தில் நடிக்க விரும்பாதவர் ரஜினி. அவர் ஒரு சில சமூக விழிப்புணர் விளம்பரங்களில் மட்டுமே நடித்துள்ளார். கமர்சியல் விளம்பரங்களில் என்றுமே நடிக்க விரும்பாதவர் அவர்.

சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ரஜினியின் அருகில் அமர்ந்திருந்தார் அப்போது அவரிடம் விளம்பரத்தில் நடிப்பது பற்றி கேட்டிருக்கிறார், 3 நாட்களுக்கு 30 கோடி தருவதாகவும் கூறியிருக்கிறார்.

அதைக்கேட்ட ரஜினி தன்னுடைய Trade Mark  சிறப்பை மட்டுமே பதிலாக தந்து மறுத்திருக்கிறார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

'என்னுடைய ரசிகர்கள் எந்த பொருளை வாங்க வேண்டும் என்று நான் கூற முடியாது. என்னால் அவர்களை பொழுது போக்க மட்டுமே முடியும்' என்று எப்போதுமே கூறுபவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.