பத்மாவதி விவகாரம்: அரசு மீது சித்தார்த் காட்டம்


பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கும் படம் பத்மாவதி. படத்தின் போஸ்டர் வெளியானதிலிருந்து அதன் மீதான சர்ச்சைகளும் ஆரம்பித்தன.ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்தரிக்கப் படுவதாக கூறி பலரும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கூறினர்.

உச்ச நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க முடியாது என கூறிவிட்டதால் பத்மாவதி ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை நிகழ்ந்து வருகின்றது.  அது குறித்து நடிகர் சித்தர் ட்விட்டரில்,

'உச்ச நீதிமன்றமே படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது எனக் கூறிய பின்னும் ஒரு திரைப்படத்தை வைத்து சட்டம் ஒழுங்குக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடைபெறும் வன்முறைகள் இனிமேல் வரவுள்ள மோசமான நிகழ்வுகளுக்கான அறிகுறியே. என்ன நடக்கிறது இங்கே. ஜனநாயகமா அல்லது குண்டர்கள் ஆட்சியா' என கடுமையாக விமர்சித்துள்ளார்.