பத்ம விபூஷண் விருது பெற்ற இளையராஜாவுக்கு ரஜினி கமல் வாழ்த்து


இசைஞானி இளையராஜாவுக்கு நேற்று (ஜனவரி 26) பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திரையுலகை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டரில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அது குறித்து அவர்,

'எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை  இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது .' என பதிவிட்டுள்ளார்.