இந்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ள தமிழ் திரைப்படங்கள்


இந்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ள படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் பாகமதி,பத்மாவத், நிமிர் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

அனுஷ்கா நடிப்பில் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படம் வரும் ஜனவரி 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

2016ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மகஷிண்டே பிரதிகாரம். இந்த படத்தை தமிழில் 'நிமிர்' என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்குகிறார். இந்த படமும் 26ஆம் தேதி வெளியாகிறது.

இவை தவிர பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் பத்மாவதி திரைப்படமும், விமல் நடிக்கும் மன்னர் வகையறா படமும் இந்த வாரம் வெளியாகிறது.