நடிகை அமலா பால் கேரளா போலீசாரால் கைது


நடிகை அமலாபால் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

தமிழில் மைனா படம் மூலம் பிரபல நடிகையான அமலா பால் விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் வாங்கிய சொகுசு காரை புதுச்சேரியில் பதிவு செய்து பயன்படுத்தி வருகிறார். 

இது தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. கேரளாவில் ரூ. 20லட்சம் வரி செலுத்தவேண்டும் அனால் புதுச்சேரியில் 75ஆயிரம் மட்டுமே செலுத்த வேண்டும் என்பதால் புதுச்சேரியில் பதிவு செய்துள்ளதாக அவர் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பிறகு அமலா பால் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.