லைலா மற்றும் மாளவிகாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ?


தமிழில் தீனா, தில்,கள்ளழகர், பிதாமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் லைலா. விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படம் மூலம் அறிமுகமானவர் லைலா. அஜித்துடன் நடித்த தீனா, சூர்யாவுடன் நடித்த பிதாமகன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

அதுபோல் மாளவிகாவும் தமிழ் சினிமாவில் நல்ல உயரத்தில் இருந்தார்.  திருட்டுப்பயலே, நான் அவனில்லை உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்திருந்தனர் மாளவிகா.  இவர் நடனம் ஆடிய சித்திரம் பேசுதடி படத்தில் வரும் வாளை மீனுக்கும் பாடல் மிகப் பெரிய வெற்றியடைந்தது.

தற்போது லைலா மற்றும் மாளவிகாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.