ஜல்லிக்கட்டு போராட்டம் ஓராண்டு நிறைவு: கமல் வாழ்த்து


கடந்த ஆண்டு உலகையே திரும்பி பார்க்க வாய்த்த நிகழ்வு ஜல்லிக்கட்டு போராட்டம். ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி இளைஞர்கள் தன்னெழுச்சியாக மெரினா கடற்கரையில் தொடங்கிய போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்தது.

இந்த போராட்டத்தின் தீவிரத்தால் ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இன்றுடன் அந்த போராட்டத்தின் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதற்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,'இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா.  சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட  வெற்றி. வாழ்க நற்றமிழர்!' என்று குறிப்பிட்டுள்ளார்.