விஷால் நடிக்கும் இரும்புத்திரை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' மற்றும் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை நடிகர் விஷாலே தயாரிக்கிறார். இரும்புத்திரை படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார்.

மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப் பட்டுவிட்ட நிலையில் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் மீதம் உள்ளது. 

முதலில்  இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 29ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.