வைரலாகும் கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்கள்


தீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி பசங்க படத்தை இயக்கிய பாண்டியராஜ் இயக்கத்தில்  நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்த படத்தின் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் 'வனமகன்' சயீஷா நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கடைக்குட்டி சிங்கம் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ்,சூரி, பானுபிரியா போன்றோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் சூர்யா ட்விட்டரில் பகிர்ந்தார். ரேக்ளா ரேஸ் நடக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி ரேஸ் நடப்பது போன்ற சிறு வீடியோ ஒன்றையும் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.